ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழு பெல்துவ பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் சேவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படைவீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தாம் உயிரிழந்த பின்னர், தமது ஓய்வூதியத்தை எவ்விதக் குறைப்பும் இன்றி தமது தங்கியிருப்பாளர்களுக்கு வழங்குமாறு கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அக்குழுவினர் பாராளுமன்றத்தை நோக்கிச் செல்ல முற்பட்டவேளையில், பொலிஸார் அவர்களைத் தடுக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டது.


















