சிகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தேக்கு மரத் தோட்டம் ஒன்றில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
மேற்படி தேக்கமரங்கள் அடர்ந்த பிரதேசத்தில் குடிசை ஒன்றை அமைத்து சிலர் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
அவர்கள் அதே குடிசையில் இரவு வேளையில் தங்கி இருந்துள்ளனர். அதன்போதே மேற்படி கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ள, இனாமலுவ பிரதேசத்திலுள்ள அரசுக்கு சொந்தமான மேற்படி தேக்குமரக்காட்டில் உள்ள மரங்களை ஒப்பந்த அடிப்படையில் அகற்றும் பணியில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
அதே கொட்டிலில் காயமடைந்த நிலையில் இருந்த மற்றும் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

















