மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திலே சேருவல மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மகாவலி கங்கையின் நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கி இருக்கின்றது. குறிப்பாக குளங்கள் வான் பாய்வதன் காரணமாக குளக்கட்டுகள் மற்றும் வரம்புகள் சேதமடையக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
மாவிலாறு அணைக்கட்டும் உடைப்பெடுத்து இருப்பதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவது தொடர்பாகவும், அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பது தொடர்பாகவும் இதன்போது கருத்து தெரிவித்தார்.


















