இந்திய குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் கூறி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த அறிவிப்பு, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆரம்பித்த சில மணி நேரங்களுக்குப் பிறகே வெளியாகியுள்ளது. அப்போது அவர் ராஜ்யசபை தலைவராக கூட்டத்தைக் கூட்டியதும் குறிப்பிடத்தக்கது.
தனது ராஜினாமா கடிதத்தை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(அ) படி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

















