தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட 61 இரத்தினகற்கள் அவரது வசம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட பணத்தை பயன்படுத்தி, 27 வயதான மூன்று குழந்தைகளின் தாயாகிய பெண்ணிற்கும், டிக்டொக் மூலம் அறிமுகமான மேலும் இரண்டு காதலிகளுக்கும் கையடக்கத் தொலைபேசிகள் வாங்கி வழங்கியதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


















