மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி புதுக்குடியிருப்புப் பகுதியில் கோழிகளை ஏற்றிவந்த லொறி வீதியின் நடுவே படுத்திருந்த கட்டக்காலி மாடுகளுடன் மோதியதில் லொறி தடம் புரண்டதால் லொறியிலிருந்த 650 கோழிகளும் உயிரிழந்தன.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடந்த இவ்விபத்தில் வாகனத்துடன் மோதிய மாடும் உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


















