அண்மையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இளைஞரான ரவிராஜ் ராஜ்கிரன் (வயது-27) நேற்று வெள்ளிக்கிழமை மூளைச் சாவடைந்தார்.
இந்நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் அவரின் இரண்டு சிறுநீரகங்களும் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டு, இரண்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
















