-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹர்ணி அமர சூரிய நேற்று பிற்பகல் 2 மணியளவில் வன்னியின் வரலாற்றுத் தொன்மை கொண்ட கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற ஆலய வழிபாட்டில் கலந்து கொண்டார்.
இவ்வாறான நிலையில் பிரதமர் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.இதன் போது நாகதம்பிரான ஆலயத்தினுடைய தொன்மை மற்றும் வழிபாட்டு முறைகளையும் மிக ஆர்வத்துடன் கேட்டு அறிந்து கொண்டார்.


















