இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான எச்.என்.பி பி.எல்.சி ஐக்கிய இராச்சியத்தின் ‘The Banker’ சஞ்சிகையினால் வழங்கப்படும் மதிப்புமிக்க Bracken விருதை ‘2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த வங்கி’ என்ற வகையில் பெற்றுள்ளது.
லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் பினான்ஸியல் டைம்ஸ் வெளியீடு, வங்கியின் பலம் மற்றும் நாட்டின் மிகவும் மீள்தன்மை கொண்ட, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட நிதி நிறுவனங்களில் ஒன்றாக அதன் நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், எச்.என்.பி பீ.எல்.சி.க்கு மதிப்புமிக்க The Banker விருதை வழங்கி கௌரவித்தது.
The Banker சஞ்சிகையின் வருடாந்த விருதுகள், உலகளாவிய வங்கிகளை அவற்றின் நிதி பலம், புத்தாக்கம், ஆளுகை மற்றும் நீண்ட கால மூலோபாய செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்கின்றன. சவாலான செயற்பாடும் சூழல் இருந்தபோதிலும், எச்.என்.பி தனது நிதிநிலை அறிக்கை ஆரோக்கியம், வாடிக்கையாளர் தீர்வுகள் மற்றும் செயற்பாட்டுத் திறன் ஆகியவற்றில் சீரான முன்னேற்றத்தை வழங்கி தொடர்ச்சியாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்த கௌரவப்படுத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த, தேசிய மீட்சிக்கும் நீண்டகால வளர்ச்சிக்கும் ஒத்துழைக்கும் ஒரு வங்கியாக நாங்கள் அடையும் முன்னேற்றத்தை இந்த விருது அங்கீகரிக்கின்றது.
எமது கவனம், நிதிநிலை அறிக்கை ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துதல், சேவை நம்பகத்தன்மையை மேம்படுத்துதல், அத்துடன் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் முன்னேற உதவும் டிஜிட்டல் மற்றும் ஆலோசனைத் தீர்வுகளை விரிவுபடுத்துதல் என்பவற்றில் உள்ளது.
ஒவ்வொரு வெற்றியும் எமது குழுக்களின் ஒழுக்கமான செயலாக்கத்தினாலும் அத்துடன் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளிகள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையினாலும் விளைந்ததாகும். எனத் தெரிவித்தார்.


















