கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, சீனாவுக்கு இரத்தினக் கற்களை கடத்த முயன்ற இலங்கையர்கள் இருவர் விமான நிலையத்தில் வைத்து சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பேருவளைப் பகுதியை சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
வர்த்தகர்கள் இருவரும் சீனாவின் செங்டு நகருக்குச் செல்வதற்காக, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றனர்.
இதன்போது, சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில், வர்த்தகர்கள் இருவரிடமிருந்து இரத்தினக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரத்தினக் கற்கள் சுமார் 32 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டது.
அந்த இரத்தினங்களில், சபையர், பத்மராக், கிரிஞ்சி, சிவப்பு குவார்ட்ஸ், கனகா, சவரிட், வைரோடி, சவரிட், சந்திரகாந்தா, தோரமல்லி மற்றும் அரனுல் ஆகிய முக்கிய ரத்தின வகைகளைச் சேர்ந்த 756 கரட் எடையுடைய 390 இரத்தினங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


















