தனது மகளை மூன்று முறை கடுமையாக தவாறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.
ஒவ்வொரு குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை என்ற ரீதியில் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு ஐந்து இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டார். இழப்பீடு செலுத்தப்படா விட்டால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


















