கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதையடுத்து அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 9:35 மணியளவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தடம் புரண்டது.
இந்த ரயில் தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மாற்று ஏற்பாடுகள் மற்றும் சேவை மறுசீரமைப்பு குறித்த தகவல்களுக்கு இலங்கை ரயில்வே திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


















