மிஹிந்தலை, சீப்புகுளம் பகுதியில் காட்டு யானைக்கு எரிகாயத்தை ஏற்படுத்தி துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
சந்தேக நபர்கள் அநுராதபுரம் மேலதிக நீதவான் லக்மாலி ஹெட்டியாராச்சி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, குறித்த சந்தேகநபர்களை ஜனவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால், சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.


















