இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று கைதுசெய்யப்பட்ட இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்குக் அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அவரை கைது செய்திருந்தது.
இதையடுத்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

















