பட்ஜெட் தோல்வியை நாம் விருந்து வைத்து கொண்டாடுவதில்லை என தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, சமூக ஊடகங்களில் பரப்படும் காணொளி கடந்த அங்டோபர் மாதத்தில் நடந்த ஒரு விருந்தில் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட காணொளி அது என்று அவர் கூறினார். ஒரு விழாவிற்குப் பிறகு பல கட்சி உறுப்பினர்கள் கூடினர், நாங்கள் அதை அனுபவித்து மகிழ்ந்தோம்.
நாங்கள் வழக்கமாக எங்கள் பகுதிகளில் சாப்பிடுவோம், குடிப்போம். இந்நிலையில் பட்ஜெட் தோல்வியை நாங்கள் கொண்டாடுவதாகக் கூறும் அறிக்கை போலியானது, என்று அவர் கூறினார்.


















