வருடத்தின் இறுதி நாளான இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 360,000 ரூபாவாக விற்பனையாகியிருந்த நிலையில் 4,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலைவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,163 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


















