தாய்வானில் போர் ஏற்பட்டால் அது இந்தியப் பெருங்கடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதிக்கான பிராந்தியம் என்பதை புவிசார் அரசியல் போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தையும், இங்கு ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் அவசியத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அவற்றால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை விவரித்த அவர், உலகளாவிய மோதல்கள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளின் தாக்கம் குறித்து குறிப்பிட்டார்.
தாய்வானில் போர் ஏற்பட்டால் அது இந்தியப் பெருங்கடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதிக்கான பிராந்தியம் என்பதை புவிசார் அரசியல் போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தையும், இங்கு ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது என்றார்.
மேலும், சமீபத்திய ஈரானிய-இஸ்ரேலிய மோதலைக் குறிப்பிட்ட அவர், எமது பிராந்தியத்திற்குள் ஊடுறுவி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. எந்தவொரு நாடும் அணுசக்தி ஆயுதங்களை வைத்திருப்பதோ அல்லது கையாள்வதோ ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.
அணு ஆயுதப் பரவல் தடுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் இறுதிக் கட்டத்தில் உள்ளதா என்ற கேள்விக்கு, ‘அவ்வாறானதொரு நிலையில் ஈரான் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே ஈரான் மீது தீர்மானத்தை எடுத்தது யார்?’ எனக் கேள்வி எழுப்பினார்.
இது, சர்வதேச சட்டங்களுக்கு புறம்பான அல்லது ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டையும், பிராந்திய இறைமை குறித்த அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கொள்கையினால் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள் எதிர்கொள்ளும் வர்த்தகச் சவால்களையும் ரணில் விக்கிரமசிங்க அடிகோடிட்டு காட்டினார்.
அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கொள்கையினால் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட வேண்டிய சூழலில் உள்ளன.
இது, இலங்கையும் அமெரிக்காவுடன் வரிக் குறைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தமானதாகும். வர்த்தகத் தடைகள் பிராந்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்பதையும், புதிய வர்த்தகக் கூட்டணிகளை உருவாக்குவதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்த கருத்துக்கள், உலகளாவிய மோதல்கள், அணு ஆயுதப் பரவல் மற்றும் சர்வதேச வர்த்தகக் கொள்கைகள் ஆகியவை இலங்கை போன்ற சிறிய நாடுகளின் உள்நாட்டு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த இலங்கையின் வெளிப்படையான கவலைகளை பிரதிபலிக்கின்றன.
இந்தியப் பெருங்கடல் ஒரு அமைதி மண்டலமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவரது வலியுறுத்தல், இலங்கையின் நீண்டகால வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் உள்ளது.


















