இலங்கையில் செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் செம்மணி படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். ‛‛செம்மணி புதைக்குழிக்கு நீதி வேண்டும். செம்மணி எங்கும் தமிழர் குருதி உள்ளது. சிங்களர் செய்த தமிழர் அநீதிக்கு நீதி வேண்டும். தோண்ட தோண்ட எலும்பு கூடு.. பார்க்க பார்க்க நொறுங்குது இதய கூடு.. இன்னும் எத்தனை சாட்சி வேண்டும்..
இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும்.. ஐநா உரிமை ஆணையமே.. நீதி வழங்க மறுக்காதே.. இனியும் மவுனம் காக்காதே.. இந்திய அரசே.. மத்திய அரசே.. குரல் கொடு.. குரல் கொடு.. பன்னாட்டு விசாரணைக்கு குரல் கொடு.. தமிழக அரசே தமிழக அரசே.. அழுத்தம் கொடு அழுத்தம் கொடு.. பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடு.. ” என்று கோஷமிட்டனர்


















