இலங்கையின் முன்னாள் சகலதுறைவீரர் ஷெஹான் ஜயசூர்ய அமெரிக்க உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஷெஹான் ஜயசூர்ய, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 12 ஒருநாள் போட்டிகளிலும், 18 ரி-20 போட்டிகளிலும் விளையாடி 10 இன்னிங்ஸ்களில் 195 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.
அவர் ரி-20 போட்டிகளில் 16 இன்னிங்ஸ்களில் 241 ஓட்டங்களையும் எடுத்தார்.
87 முதல் தர போட்டிகளில், ஷெஹான் 145 இன்னிங்ஸ்களில் 13 சதங்களையும், 32 அரைசதங்களையும் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















