இலங்கை உட்பட உலக நாடுகள் பலவற்றில் இராணுவ செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பி ல் உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்பரியேசஸ் கவலை தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளின் ஒட்டுமொத்த இராணுவச் செலவினம், மு ன்னெப்போதும் இல்லாத வகையில் 2.7 டிரில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
போர்களை தீவிரப்படுத்துவதில் நாடுகள் காட்டும் ஆர்வம், அமைதியை ஏற்படுத்துவதில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிதி நெருக்கடி
குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில முக்கிய ஒப்பீடுகளைச் செய்துள்ளார். அதில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது, 150 நாடுகளில் பணியாற்றி வரும் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு,
ஒரு ஆண்டுக்கு மொத்தமாகவே 210 கோடி அமெரிக்க டொலர் மட்டுமே நிதியாகக் கிடைக்கிறது. ஆ னால், உலக நாடுகள் இராணுவத்திற்காக இதே தொகையை ஒவ்வொரு
8 மணிநேரத்திற்கும் செலவிடுகின்றன. தற்போது உலகிற்குத் தேவையானது உயிர்களைப் பாதுகாப்ப தில் பாரிய கவனம் செலுத்துவதே ஆகும். போர்களைத் தீவிரப்படுத்துவதை விட,
அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளில் ஈடுபடுவதே மனிதகுலத்திற்குச் சிறந்த மருந்து, என டெட் ரோஸ் அதானம் வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய சுகாதாரத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பாரிய அளவில் வீழ்ச்சியடைந்து வருவது, பெரும் சுகாதார நெருக்கடிகளை உருவாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


















