-விமல் சத்தியாக்கிரகத்தைத் தொடரலாம் என்கிறார் நளிந்த-
பிரதமர் பதவியிலோ அல்லது கல்வி அமைச்சர் பதவியிலோ ஹரிணி அமரசூரியவை அரசாங்கம் நீக்காது என்பதால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது ‘சத்தியாக்கிரகத்தை’ தொடர வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கல்விச் சீர்திருத்தங்கள் கல்வி அமைச்சின் மூலம் செயல்படுத்தப்பட்டாலும், அவை அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் பிரச்சாரம் முழுவதும் கல்வி சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசியது. இதன்படி நடந்து முடிந்த இரண்டு தேர்தல்களில் கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்த அரசாங்கம் மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது.
கல்வி சீர்திருத்தங்களை அரசாங்கம் விவேகத்துடனும் துணிச்சலுடனும் செயல்படுத்தும்.
இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கும், தங்களுக்கு எதிரான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கும் சீர்திருத்தங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒரு சர்ச்சையை உருவாக்குகின்றார்கள் என்றார்.


















