இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோருக்கு எதிரான இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்; வழக்கை மீள விசாரணைக்கு அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கின் விசாரணைக்காக எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதிக்கு மீள அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


















