அடுத்த போகத்திலிருந்து நெல்லின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கமத்தொழில் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார்.
சம்பா மற்றும் கீரிசம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இருப்பினும், அரிசியின் விலையில் எவ்வித அதிகரிப்பும் இருக்காது எனவும் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
நெல்லின் விலையில் திருத்தம் செய்வது குறித்து ஏற்கனவே கலந்;துரையாடியுள்ளதாகவும், குறிப்பாக நாடு நெல் 120 ரூபாயாக இருக்கும் என்றும், சம்பா நெல்லின் விலை 125 இலிருந்து 130 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும், கீரி சம்பாவின் விலை விவசாயிகளின் தரப்பைப் பொறுத்து 132 இலிருந்து 140 ரூபாயாக அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.


















