2026 ஆம் ஆண்டின் கடந்த 13 நாட்களில் 77 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்தார்.
ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், 2026 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களால் 82 பேர் உயிரிழந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


















