பதுளை மாவட்ட தொழில் திணைக்கள அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மின்னஞ்சல் இன்று புதன்கிழமை காலை 09.24 மணியளவில் பதுளை மாவட்ட தொழில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த மின்னஞ்சலில் பதுளை மாவட்ட தொழில் திணைக்கள அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பில் பதுளை பொலிஸ் தலைமையகம் மற்றும் கொழும்பு தொழில் திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


















