• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Tuesday, March 31, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் அரசியல் செய்திகள்

போர் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை – பொறுப்புகூறலுக்கான சர்வதேச அழுத்தங்கள் தொடரவேண்டும்

Yarl Thinakkural by Yarl Thinakkural
January 16, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள்
0
போர் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை – பொறுப்புகூறலுக்கான சர்வதேச அழுத்தங்கள் தொடரவேண்டும்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுவந்த இலங்கையில் மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான

பொறுப்புக்கூறல் பற்றிய ‘நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் – நீதி கிட்டும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்துவிட்டோம்’ எனும் தலைப்பிலான 30 பக்க விரிவான அறிக்கை கடந்த 13ம் திகதி வெளியிடப்பட்டது.

இலங்கையில் ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வெறுமனே தற்செயலாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல எனவும், மாறாக அவை வேண்டுமென்றே பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட, முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இம்மீறல்கள் தகவல்களைத் திரட்டுவதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும, தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான காத்திரமான இவ்வறிக்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கையானது, இலங்கையில் நிகழ்ந்த சர்வதேச சட்டங்களுக்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்னேற்றகரமானதொரு நகர்வாகும்.

கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் யுத்தகால பாலியல் வன்முறைகள் வேண்டுமென்றே பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட, முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் அவற்றைப் போர்க்குற்றங்களாகவோ அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாகவோ கருதமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின் ஊடாகக் கண்டறியப்பட்டிருப்பதன் பிரகாரம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள குற்றங்கள், அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் இழப்பீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தைக் காண்பிக்கின்றன.

அதேவேளை இலக்கிடப்பட்ட தடைகள், குற்றவியல் விசாரணைகள், வழக்குத்தாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகளுக்கு சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் தமிழ்ப்பெண்கள் வன்புணரப்பட்டமை குறித்து நீண்டகாலமாக அறிந்திருந்தாலும், இத்தகைய கட்டமைக்கப்பட்ட பாலியல் வன்முறைகள் அரசாங்கங்களினால் நீண்டகாலமாகப் புறந்தள்ளப்பட்டும், அவற்றுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க இயலாமல் அக்குற்றங்கள் நியாயப்படுத்தப்பட்டும் வந்திருப்பதாக ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்குரிய முயற்சிகளை சர்வதேசப் பங்காளிகள் ஆரம்பிக்கவேண்டும்.

இலங்கையில் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் 2021 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் நிறுவப்பட்டது.

இருப்பினும் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் 26 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும் கடந்தகால அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன.

‘நீதியை நிலைநாட்டுவோம்’ என்ற வாக்குறுதியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறியிருந்தாலும், தற்போதுவரை எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை. இருப்பினும் இவ்வாறான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளுக்கும், சமூக ரீதியான தாக்கங்களுக்கும் முகங்கொடுத்துவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கமும், அதன் சர்வதேசப் பங்காளிகளும் இணைந்து பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான மருத்துவ உதவிகள், இடைக்கால நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்கு ஏற்றவாறான உடனடி செயற்திட்டமொன்றை ஆரம்பிக்கவேண்டும்.

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோரைத் தண்டிக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு இரு;ககிறது. அக்கடப்பாடு நிறைவற்றப்படும் வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை

மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: srilanka NewsYarlthinakkural
Previous Post

இரு காற்றாலை மின் திட்டங்களை – மன்னாரில் ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி

Next Post

கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் – நாவற்குழியில் கோர விபத்து : இளைஞர்கள் இருவர் மரணம்!

Related Posts

அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!
அறிவித்தல்கள்

அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

March 31, 2026
மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!
அரசியல் செய்திகள்

மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

March 31, 2026
அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
அரசியல் செய்திகள்

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

March 31, 2026
மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் : நேரடி வாக்குமூலம்
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் : நேரடி வாக்குமூலம்

March 31, 2026
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது – அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!
அரசியல் செய்திகள்

இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது – அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

March 31, 2026
Next Post
கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் – நாவற்குழியில் கோர விபத்து : இளைஞர்கள் இருவர் மரணம்!

கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் - நாவற்குழியில் கோர விபத்து : இளைஞர்கள் இருவர் மரணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

March 31, 2026
மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

March 31, 2026
அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

March 31, 2026
மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் : நேரடி வாக்குமூலம்

மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் : நேரடி வாக்குமூலம்

March 31, 2026

Recent News

அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

March 31, 2026
மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

March 31, 2026
அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

March 31, 2026
மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் : நேரடி வாக்குமூலம்

மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் : நேரடி வாக்குமூலம்

March 31, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்! March 31, 2026
  • மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்! March 31, 2026
  • அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி! March 31, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.