கட்டுகாஸ்தோட்டை கொஹாகொடை பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்களிடமிருந்து 30 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உக்கரசபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இப்பகுதியில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன் பிரதான சந்தேக நபரைக் கைது செய்ய மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


















