-பிரதி அமைச்சர் ரத்ன உறுதி-
வரலாற்று ரீதியாக நட்டமடைந்து வந்த இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், அதன் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த வேலைத்திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே,
மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை நிலைப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நிதி ரீதியான அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். பல வருடங்களாக, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவற்றிற்கான நிலுவைத் தொகைகள் குவிந்து, நட்டமடையும் ஒரு நிறுவனமாக மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஓரங்கட்டப்பட்டிருந்தது.
2026 ஆம் ஆண்டு, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் வரலாற்றில் ஒரு விசேட, மாற்றத்திற்கான ஆண்டாக அமையும் என நாம் நம்புகிறோம், என பிரதி அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.


















