-அறிவித்தது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு-
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான (ஜனவரி – மார்ச்) மின்சார கட்டண திருத்தத்தை அமுல்படுத்தாதிருக்க, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இலங்கை மின்சார சபை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உரிய மின்சார கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்க தவறியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை எடுக்கும்போது, குறிப்பிட்ட காலத்திற்குள் முறையான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படாமை, ஆரம்ப முன்மொழிவில் காணப்பட்ட குறைபாடுகள், முதல் காலாண்டின் மீதமுள்ள குறுகிய காலத்திற்கு மட்டும் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் அதிக சதவீத மாற்றம் ஏற்பட்டு தேசிய பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஆகிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதிக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை 2025 நவம்பர் 14 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு, கடந்த ஆண்டு ஒக்டோபரில் மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மின்சார சபை குறித்த முன்மொழிவை 2025 டிசம்பர் 29 ஆம் திகதியே சமர்ப்பித்துள்ளது. அதிலும் பல பிழைகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, 2026 ஜனவரி 05ஆம் திகதி ஜனவரி 08 இற்குள் சரியான முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு Pருஊளுடு அறிவித்திருந்தது.
இதற்கு பதிலளித்த மின்சார சபை, திருத்தப்பட்ட முன்மொழிவை சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் என அறிவித்ததாகவும், இதுவரை எந்தவொரு திருத்தப்பட்ட முன்மொழிவும் கிடைக்கவில்லை எனவும் Pருஊளுடு தெரிவித்துள்ளது.
அத்துடன், முதல் காலாண்டின் குறுகிய காலத்திற்கு மட்டும் வருமானம் மற்றும் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் கொண்டு கட்டண திருத்தம் செய்யப்படுமானால், அது அதிக சதவீத மின்சார கட்டண மாற்றத்திற்கும், அதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு மேலும் தீங்கு விளைவிக்கும் நிலைக்கும் வழிவகுக்கும் என அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, 2026 முதல் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தத்தை அமுல்படுத்தாதிருக்கும் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக Pருஊளுடு அறிவித்துள்ளது.
இதேவேளை, 2026 இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.


















