தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி, கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டில் 6 – ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து கல்வி அமைச்சுக்கு முன்னால் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய ஆங்கிலப் பாட கற்றல் தொகுதியை தவிர, ஏனைய பாடங்கள் தொடர்பான கற்றல் தொகுதிகளை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.


















