மட்டக்களப்பில் மகளிடம் பாலியல் சேஷ;டை புரிந்த குற்றச்சாட்டில் கைதான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தந்தை தொழில் நிமித்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் தந்தை அவரது 4 வயது 8 மாதம் கொண்ட மகளிடம் மீது பாலியல் சேட்டை விடுத்துள்ளதாக மகள், தாயாரிடம் முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து, தாயார் பொலிஸ் நிலையம் ஒன்றில் கடந்த வியாழக்கிழமை முறைப்பாடு செய்ததையடுத்து தந்தை கைது செய்யப்பட்டதுடன் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவரை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 29ம் திகதி வரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மேலதிக விசாரணைகளை பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















