கண்டி, கலஹா- தெல்தோட்டை கல்லந்தென்ன கீழ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அபூர்வக் கற்பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் தித்வா சூறாவளியினால் குறித்த ஆலய வளாகத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்தே குறித்த கற்பாறை வெளிப்பட்டுள்ளது.
கற்பாறையின் ஒரு பகுதி நீல நிறத்தில் காட்சியளித்ததையடுத்து, பொதுமக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய கலஹா பொலிஸார் கற்பாறைக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இவ்வாறான நிலையில்,தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். இரண்டு நாட்களுக்குள் இந்த கற்காறை தொடர்பில் அறிக்கையை வழங்க உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.


















