‘தேசிய வீதிப் பாதுகாப்பு’ திட்டத்தின் கீழ் பேருந்து சாரதிகளின் போதைப் பொருள் பாவனையை கண்டறிவதற்கான பரிசோதனை கொழும்பு – கோட்டை பகுதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம், மற்றும் பொலிஸார் இணைந்து மேற்படி சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது, போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் சிலர், மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பவானை செய்தமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கை இனிவரும் காலங்களிலும் நாடு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















