அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் நேற்று புதன்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த அழகிப் போட்டியானது, உலகின் 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகளின் பங்கேற்புடன் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















