-உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாதசாரிகள்-
நாட்டில் ஜனவரி மாதத்தின் 01 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 113 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
ஜனவரி மாதத்தின் 01 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 120 பேர் உயிரிழந்துள்ளதுடன் 216 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்துக்களினால் பெரும்பாலும் பாதசாரிகளே உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆகும்.
அத்துடன், அதிகளவில் 45 மோட்டார் சைக்கிள் விபத்துக்களும் 7 சைக்கிள் விபத்துக்களும் பதிவாகியுள்ளன என்றார்.


















