2025ம் ஆண்டில் சுமார் 23 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
‘தேசிய ஒற்றுமைக்கான தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம்’ குறித்து நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கைப்பற்றல் கடந்த 2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
2024ஆம் ஆண்டு, 10,871 கிலோகிராம் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், ஹீஷ; மற்றும் கொக்கய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
2025ஆம் ஆண்டு 23,692 கிலோகிராம் 307 கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது எனவும், இது முந்தைய வருடத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்தார்.


















