இலங்கை முதலீட்டு சபை இந்த ஆண்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர் அர்ஜுன ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான முதலீட்டு திட்டங்களில் சைனோபெக் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம், மசாலா மற்றும் வேளாண் உற்பத்தி செயலாக்கம், தரவு மையங்கள் மற்றும் , சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில் இலங்கைக்கு 1.057 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடு கிடைத்ததாகதலைவர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் 186 நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்ததாகவும், அதில் 146 முதலீட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். இத்திட்டங்களின் மொத்த மதிப்பு 1.906 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டு திட்டங்களில் 70 புதிய திட்டங்களும், 76 ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களும் அடங்குவதாக அவர் விளக்கினார்.


















