-அடுக்குமாடி குடியிருப்புகள் 500,000 டொலராம்-
கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தின் முதலாவது குடியிருப்புத் திட்டமான ‘பே ஒன் ரெசிடென்சஸ்’ நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தத் திட்டமானது பொறியியல் மற்றும் கட்டுமானத் துறையில் 45 ஆண்டுகால நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஐஊஊ நிறுவனத்தின் பின்புலத்துடன், ஐ.சி.சி போர்ட் சிட்டி (Pvt) Ltd நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.
இத்திட்டத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் 500,000 அமெரிக்க டொலர்கள் முதல் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு 68-72 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்ட ஒரு படுக்கையறை குடியிருப்புகள் முதல் 306-515 சதுர மீற்றர் வரையிலான 4 படுக்கையறைகளைக் கொண்ட சொகுசு குடியிருப்புகள் வரை நிர்மாணிக்கப்படவுள்ளன.


















