கிறிஸ்த்தவ மதகுரு மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 6 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவில் பணியாற்றும் 6 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களே கைது செய்யப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கம்பஹா நீதிவான் முன்னிலையில், ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபர்களை இன்று திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


















