மகாவலி அதிகாரசபையின் கீழ் உள்ள விதை உற்பத்தி மற்றும் மேலதிக பயிர்ச் செய்கை பண்ணைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்த அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தகுதியுள்ள உள்ளூர் விவசாய தொழில்முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குத்தகை அடிப்படையில் இந்தப் பண்ணைகளை வழங்கி, தேசிய உற்பத்தியில் அவற்றின் பங்களிப்பை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.


















