பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகில், போதைப்பொருட்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் ஆவார்.
இவரிடம் இருந்து ஒரு கிலோ 105 கிராம் ஐஸ், 125 ஹெரோயின் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















