புதிய அரசியலமைப்பு ஒன்றை வடிவமைக்கும் நடவடிக்கையில் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறையை உறுதி செய்யவேண்டும் என One Text Initiative அமைப்பு கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தக் கடிதத்தில், மறுமலர்ச்சி யுகத்தை கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ளல் அத்தியாவசியமான ஒரு முன்தேவை என்பதையும் தமது இயக்கம் உறுதியாக நம்புவதாகவும், எனினும், ஒரு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ளல் இலங்கைக்கு ஒரு முக்கியமான சவால் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முயற்சியில் அனைவரையும் உள்ளடக்கி, அனைவரினதும் பங்கேற்பை உறுதிசெய்யும் சீர்திருத்தச் செயல்முறையை உறுதி செய்வதும் அவசியம். இந்நிலையில், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்புசார் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சட்டமூலத்தை வரைய வேண்டும் எனவும், One Text Initiative அரசியலமைப்பு சீர்திருத்த உரையாடலுக்கான இயக்கம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


















