இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9,158 சிப்பாய்களுக்கு பதவி நிலை உயர்வுகள் வழங்கப்பட்டன.
சிப்பாய்கள் பிரிவில், அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலையிலிருந்து அதிகாரவாணையற்ற அதிகாரி-I ஆம் நிலைக்கு 260 பேரும், அதிகாரவாணையற்ற அதிகாரி –II ஆம் நிலைக்கு 1,211 பணிநிலை சார்ஜன்ட்களும் தரம் உயர்த்தப்பட்டனர்.
அத்துடன் பணிநிலை சார்ஜன்ட் நிலைக்கு 1,704 சார்ஜன்ட்களும், 2,339 கோப்ரல்கள் சார்ஜன்ட் நிலைக்கும், 2,204 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும், 1,440 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் நிரந்தர படையணி மற்றும் தொண்டர் படையணிகளிலில் இருந்து தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


















