தற்போதைய அரசாங்கம் நல்ல நிதி ஒழுக்கத்தைக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் ‘டிஜிட்டல் சகாப்தத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பொருளாதார வளர்ச்சி’ என்ற கருப்பொருளில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
2028 ஆம் ஆண்டில் மற்றொரு கடன் மறுசீரமைப்பு அல்லது பொருளாதார சரிவு ஏற்படும் என்ற அறிவிப்பு இருந்தபோதிலும், 2025 ஆம் ஆண்டில் 3.934 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் செலுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற அற்பமான பேச்சுக்கள் முதலீட்டாளர்களின் மனதில் நாட்டைப் பற்றிய தேவையற்ற சந்தேகத்தை உருவாக்குகின்றன.
‘டித்வா’ சேதம் காரணமாக கடன் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்;. இதுபோன்ற விஷயங்களைப் பற்றி வாதிடுபவர்கள் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைய விரும்புவோராக இருக்கலாம். தற்போதைய அரசாங்கம் நல்ல நிதி ஒழுக்கத்தைக் கொண்டுள்ளது என்றார்.


















