பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று பொது அவசரகால நிலையைப் பிரகடனம் கொண்டு வரப்பட்ட நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார்.
இதையடுத்து, பிரகடனம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன் போது தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக இரு வாக்குகளும் கிடைத்தன.
பிரேரணைக்கு எதிராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே வாக்களித்திருந்தனர்.


















