டித்வா பேரிடரினால் காணாமல்போனவர்களை தேடும் பணிகள் அதிகாரபூர்வமாக நிறுத்தப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், 173 பேர் காணாமல்போயுள்ளனர். டித்வா பேரிடர் நிகழ்ந்து 2 மாதங்கள் கடந்துள்ளதால் தேடுதல் பணிகள் பலனளிக்கப்போவதில்லை எனவும், இருப்பினும், காணாமல் போனவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட மாட்டார்கள் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருக்கின்றது.
மேலும், இது 2004 சுனாமிக்கு இணையாக உள்ளது, அதன் பிறகு 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல்போனார்கள். அவர்களுடைய அதிகாரபூர்ப பட்டியல் உள்ளது.
நேற்று நிலவரப்படி, டித்வா சூறாவளியால் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கை 650 ஆக உள்ளது, சமீபத்தில் நான்கு கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளன.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.


















