-நீதிமன்றில் அறிவிப்பு-
இலங்கையில் மூன்றாம் பாலின சமூகத்தினரை இலக்கு வைத்து சுற்றுலா மேம்பாட்டுத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மீளப் பெற்றுக்கொள்வதாக சட்ட மா அதிபர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி அறிவித்தலை நீக்குவதற்கு சுற்றுலாத்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதிநிதி நீதிமன்றில் அறிவித்தார்.


















