இஞ்சி வெறும் உணவின் சுவைக்காக பயன்படுத்தும் பொருள் மாத்திரமல்ல. அதில் பலவிதமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன.
நினைவுத் திறனை அதிகப்படுத்தும் சக்தி இஞ்சிக்கு உண்டு. கல்லீரலை சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்.

கொழுப்பைக் குறைக்கும். இரத்தக் குழாயின் உட்புறத்தில் அடைப்பு சேர்வதை தடுக்கிறது. இதய சுவாச தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
வயிற்றுக் கோளாறு, வாந்தி, மூட்டு வலி போன்றவற்றுக்கு இஞ்சி சிறந்த நிவாரணமாக இருக்கும்.
பசியுணர்வே இல்லாதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட வேண்டும்.
இஞ்சியின் சாற்றை கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் வெல்லம் கலந்து குடித்தால் வாதப் பிரச்சினை நீங்கும்.

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தேனில் மூழ்கும் அளவு போட்டு ஒரு வாரம் வரையில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பித்தம் தணியும்.
தலைவலி ஏற்படும்பொழுது இஞ்சியை தோல் சீவி பசை போல அரைத்து வலிக்கும் இடத்தில் தேய்த்தால் வலி காணாமல் போய்விடும்.
இஞ்சியின் சாற்றை எடுத்து அதனை சம அளவு வெங்காயச் சாறுடன் கலந்து வெறும் வயிற்றில் ஒரு கரண்டி குடித்து வந்தால் நீரிழிவு பிரச்சினை சரியாகும்.

















