-அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தகவல்-
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்நாட்டில் புத்த தர்மத்துக்குப் பாதிப்புகள் ஏற்படும் என பலர் விமர்சனம் செய்தமை பொய்யாக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சிறுவர்களைத் துறவிகளாக புத்த சாசனத்தில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டம், தவறிழைக்கும் பிக்குகளுக்குத் தண்டனை வழங்கும் திட்டம், பிக்குகளுக்கான அறநெறி மற்றும் பௌத்த கல்வி முறையை நெறிப்படுத்தல், பௌத்த பிக்குகளுக்கு விசேட அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுரை ஆலோசனைகள் இப்பணிகளுக்காகக் கிடைத்து வருகின்றன என்றார்.


















