-பாராளுமன்றத்தில் சவால் விட்ட சஜித்-
அரசாங்கம் தனக்குக் கிடைத்துள்ள மக்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளால் உற்சாகமடைந்திருந்தால், சாக்குப்போக்குகளைக் கூறி மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடாமல் இயலுமானால் உடனடியாக அதனை நடத்திக் காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உயரையாற்றும் போது அரசாங்கத்திற்கு மேற்படி சவாலினை விடுத்த அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:-
அரசாங்கத்திற்கு 65 வீத மக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுமானால், ஏன் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தயங்குகிறது? குழுக்களை அமைத்து தேர்தல் முறையை மாற்றப்போவதாகக் கூறி தேர்தலைத் தள்ளிப்போடுவதை விடுத்து, தைரியமிருந்தால் தேர்தலை நடத்துங்கள்.
பொதுத்தேர்தலுக்குப் பின்னரான உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கம் 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. எனவே மக்கள் ஆணையைச் சரியாக அளவிட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள் என்றார்.


















